Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மூச்சுக்கு மூச்சு இறைசிந்தனை

மூச்சுக்கு மூச்சு இறைசிந்தனை

மூச்சுக்கு மூச்சு இறைசிந்தனை

மூச்சுக்கு மூச்சு இறைசிந்தனை

ADDED : மே 08, 2011 04:05 PM


Google News
Latest Tamil News
* நல்லதையே கேள், நல்லதையே பார், நல்லதையே செய், நல்லதையே நினை, அப்போது கடவுளின் அருள் கிடைக்கும். அனைத்து கெட்ட எண்ணங்களும் மறைந்து விடும்.

* எள்ளில் எண்ணெய் போலவும், பாலில் வெண்ணெய் போலவும் இறைவன் அனைத்துப் பொருள்களிலும் கலந்துள்ளான்.

* தாய் தனது குழந்தையை விடாமல் கண்காணிக்கிறாள். இறைவனுக்கு நாம் தளிர்நடை பயிலும் குழந்தைகள் தான்.

* தாய்ப்பால் உண்ண குழந்தைக்கு நேரம் காலம் தேவையில்லை, அதேபோல் இறைவனை வணங்கவும் நேரம் காலம் தேவையில்லை.

* ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும் இறைவனை நினைக்கப் பழகினால், இறுதி மூச்சு விடும் போதும் நினைத்துக் கொண்டே விட முடியும்.

* உடலில் வலி ஏற்பட்டால் 'ஐயோ!' என்று பிதற்றிக் கொண்டு ஆறுதல் அடைகிறோம், அதுபோல் வாழ்வில் துன்பம் ஏற்பட்டால் இறைவன் பெயரைக் கூறினால் ஆறுதல் கிடைக்கும்.

* அடுத்தவர் இன்பத்தில் நாம் மகிழ்ந்து, மற்றவர் துன்பத்தில் நாம் நெகிழ்ந்து ஏகமாக விளங்குவதே இறைவன் அருளைப் பெறும் வழி.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us